Wednesday, December 23, 2015

சூரியனுக்குள் ஓர்நாள்

ஒளியொன்று இருப்பது எத்தனை உண்மையோ
அங்கே உயிரொன்று இருப்பதும் அத்தனை உண்மை.

சூரியனின் செந்நிற பிழம்பினுள்ளே இன்று சென்றேன்

அதீதசிகப்பு அளவான மஞ்சள் அதனுள் கரும்புள்ளியாய் காட்சியிருந்தது

பிரவிபலன் கண்டுண்டது கண்கள்

கண்டுண்ட காட்சி
என்னில் உன்
நினைவுக்கொப்பானது

உவமை நீயாயிருக்க உனையே பெயராக்கிவைத்திருக்கவேண்டும்

தாமதம்...
என்றோ முந்திவிட்டான் விசுவாமித்திரன்.

மனிதக்காய்ச்சல் காலம்

ஒழுக்கமீறுதல் இயற்கைதான்

ஒழுக்கம் கற்றுக்கொடுத்ததாலேயே இயற்கையைவென்று கடவுளானான் மனிதன்

கடவுள்களின் காலம் காலாவதியாகி,
மீண்டும்
ஆதிகாலத்தின் ஒழுக்கமீறுத்தல் எனும் இயற்கையின் ஆட்சிகாலமாகிவிட்டது இக்காலம்

இக்காலம் இம்முறை இயற்கையல்ல!

காரணம்,
மதியுச்சத்திலிருந்து மண்வீழ்ந்துமடிய என்றும் நினைத்திடாது இயற்கை;
மாறாக மனிதனே
தானே வீழ்ந்து  இயற்கையையும் சேர்த்தழித்துக்கொண்டிருக்கிறான்.

மனிதக் காய்ச்சல் காலமிது.

Sunday, December 20, 2015

சாகும்வரை போராடு
இறந்துபின் உயிர்பெற்றவர்களும் இங்கு ஏராளம்

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...